இராமநாதபுரத்தில் இந்திய உணவுக்கழகத்தின் சேமிப்புக் கிட்டங்கியை அதன் மண்டல மேலாளர் பாப்பல் பீர் சிங் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதியில் இந்திய உணவுக்கழகத்தின் 12,530 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்புக்கிட்டங்கி உள்ளது. இந்தக்கிடங்கில் மத்திய அரசின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேவையான அரிசி, கோதுமை இருப்பு வைக்கப்பட்டது.
இந்தக்கிட்டங்கியை இந்திய உணவுக் கழகத்தின் மண்டல மேலாளர் பாப்பல் பீர் சிங் பார்வையிட்டு,
அரிசி,கோதுமை இருப்பு குறித்து ஆய்வு செய்தார். உணவுப் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன எனவும் ஆய்வு செய்தார். மேலும், உணவுப் பொருள்களை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என அங்கு உள்ள அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாதம் 4 ஆயிரம் டன் அரிசி,100 டன் கோதுமை தமிழக அரசுக் கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின்போது மேலாளர் கார்த்திகேயன், தரமேலாளர் ரவி ஆகியோர்ருந்தனர்.