இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் மண்டபம் மீன் இறங்குதளம் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவர்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மீனவர்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்
அப்பொழுது மகளிர்குழு கடல்பாசி வளர்ப்பிற்கான திட்ட உதவிகளை அதிகப்படுத்தி தர கோரிக்கை வைத்தார்கள். அதேபோல் மீனவர்களுக்கு வழங்கும் மீன்பிடி தடைகால நிவாரணத்தொகை வராதவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். அதேபோல் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கூடுதலாக மீன்பிடி இறங்கு தளம் கட்டித் தரவும் மற்றும் குந்துகால் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவு படுத்தி அமைத்து தருதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள். மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளும் இக்குழு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தும் என தெரிவித்தார்.
கலோனியல் மாளிகையை பார்வையிட்டனர்
தொடர்ந்து மண்டபத்திலுள்ள கலோனியல் மாளிகைக்குச் சென்று ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகையினை பார்வையிட்டு, அதனுடைய பிரதானங்கள் பாதுகாக்கும் வகையில் தற்பொழுது கட்டடம் புதுப்பிக்கப்பட்டு வருவதை அதே நிலையில் பணிகளை மேற்கொண்டு கலை சிற்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் மாண்புமிகு திரு.க.அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின் போது கலந்து கொண்ட உறுப்பினர்கள்
இந்த ஆய்வின் போது இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் , தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழு அரசு செயலர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூடுதல் செயலர் சுப்ரமணியன் , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் , இணை இயக்குநர் மருத்துவம் சகாய ஸ்டீபன் ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து , இராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் மாரியப்பன் , இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு , மீன்வளத்துறை இணை இயக்குநர் காத்தவராயன் , உதவி இயக்குநர் சிவகுமார் , வட்டாட்சியர் ஜாபர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனார்.