Sunday, November 27, 2022
Homeமருத்துவம்உடலுக்கு நலம் தரும் சுக்கு

உடலுக்கு நலம் தரும் சுக்கு

நம் உடலுக்கு நலம் தரும் சுக்கு பற்றி பார்ப்போம்

  • சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை” என்பது பழமொழியாக வழங்கி வருவது. அத்தகைய சுக்கு பல நோய்களை கண்டிக்கும் சக்தி வாய்ந்ததாகும்.
  • சுக்குடன் சிறிதளவு பால் சேர்த்து மையாக அரைத்து, சூடாக்கி இளஞ்சூடான பதத்தில் வலியுள்ள கை, கால், மூட்டுகளில் பூசி வந்தால் வலிகள் முற்றிலும் குணமாகும்.
  • சுக்கை தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
  • சிறிதளவு சுக்குப் பொடியுடன், ஒரு வெற்றிலையை சேர்த்து மென்று தின்றால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
  • சுக்கில், சிறிதளவு நீர் சேர்த்து, விழுதாக அரைத்து, நெற்றியில் பற்று போட்டால் தலைவலி போய்விடும்.
  • சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து காய்ச்சி குடித்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
  • சுக்கோடு சிறிதளவு வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி அகலும்.
  • சுக்குடன், மிளகு, வெள்ளை சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து, தொண்டையில் பூசினால் தொண்டைக் கட்டு மாறும். குரலும் இயல்பு நிலைக்கு வரும்.
  • சுக்குடன் சிறிதளவு துளசி இலைகளை சேர்த்து மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
  • சிறிதளவு சுக்குடன், சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள கிருமிகள் அழியும்.
  • சுக்குடன் கொத்தமல்லி சேர்த்து கஷாயம் தயாரித்து பருகினால் மூல நோய் தீரும்.
  • சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு கப் தண்ணீர் குடித்தால் தேள், பூரான் கடி போன்றவைகளின் விஷம் முறியும்.
  • சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் நீர்க் கோவை நீங்கும். ஈறு, பேன் போன்றவைகளும் ஒழியும்.
  • தயிர் சாதத்துடன் சிறிதளவு சுக்குப் பொடி சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும்.
  • சுக்குப் பொடியுடன், உப்பு சேர்த்து பல் துவக்கி வந்தால் ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.
  • சுக்கினை உணவில் சேர்த்து உண்போம். உடல் நலம் பெறுவோம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: