Thursday, March 28, 2024
Homeபரமக்குடிபரமக்குடியில் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு

பரமக்குடியில் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு

பரமக்குடி வைகை ஆற்றில் தடுப்பணை மற்றும் கால்வாய்கள் சேதப்பட்டு உள்ளன.முதல்மை பொறியாளர் ஆய்வு

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வைகை ஆற்றில் சேதமடைந்த தடுப்பணைகள், கால்வாய்களை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர், மந்திவலசை ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள்  கட்டப்பட்டு வைகை பாசனநீர் கால்வாய்கள்  மூலம் கண்மாய்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பணைகள். பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுவதால் பாசன நீரை முறையாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தடுப்பணைகளிலிருந்து வலது மற்றும் இடது பிரதானக் கால்வாய்கள் மூலம் பாசனநீர் கண்மாய்களுக்குத் திறந்து விடப்படுகிறது. இக்கால்வாய்கள் புதர்கள் அடர்ந்தும், நகர்பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயாகவும் மாறிவிட்டது. நிதிப்பற்றாக்குறை என காரணம் கூறி கால்வாய்கள் முறையாக சீரமைக்கப்படாததால் போதிய பாசனநீர் கண்மாய்களுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தடுப்பணகள்,  கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஞானசேகர் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் வியாழக்கிழமை வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் கால்வாய்ப் பகுதி SIT களை ஆய்வு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக வைகை ஆற்றில் பாசனநீர் திறந்துவிடப்படுவதல் பெரும்பாலான விவசாய நிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வைகை பாசனநீர் வீணாகாமல் முறையாக அனைத்து கண்மாய்களுக்கும் சென்றடையும் வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments