Sunday, February 25, 2024
Homeஉடல்நலம்மனித உடலில் நோய் வருவதற்கான அறிகுறிகள்

மனித உடலில் நோய் வருவதற்கான அறிகுறிகள்

 

  • பொதுவாக நம் உடலில் ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் சில அறிகுறிகளை வைத்து அதை தெரிந்து கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை காண்போம்…
  • முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
  • வயிற்றுவலியோ அல்லது வயிற்றாலையோ இருப்பின் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
  • கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
  • காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் காய்ச்சல் வருவதற்கான அறிகுறியாகும்.
  • கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
  • உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
  • கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதிக அழுத்தமும் சூடும் என்றால் என்ன அர்த்தம்.
  • முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் உடலில் அதிக எடை கூடிவிட்டது அதைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.
  • தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
  • உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
  • தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
  • கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments