Thursday, March 28, 2024
Homeசெய்திகள்உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைப்பு

உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைப்பு

சேலம்: சேலத்தில் புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள முத்துமலை முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.

உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை.

சேலம் வாழப்பாடி அருகே கோவில் கும்பாபிஷேகம் சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம். இங்கு 2015 ஆம் ஆண்டு பிரம்மாண்ட முருகனின் திருமேனியை நிறுவத் திட்டமிட்டு 2016 ஆம் ஆண்டு முதல் இந்த திருப்பணி தொடங்கியது. இந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிரது. அதற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

முருகன்

தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதமாக இந்த கோயில் சேலத்துக்கு அருகே உள்ளது. 146 அடி உயர கொண்டு எழுந்தருளியுள்ளது. உலகிலேயே முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலையில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை 140 அடி உயரமாகும். ஆனால் இந்த சேலம் முத்துமலை முருகன் சிலையின் உயரமோ 146 அடியாகும்.

உலகிலேயே உயரமான சிலை

இதனால் உலகிலேயே இந்த சிலைதான் உயரமான முருகன் சிலையாகும். மலேசியாவில் இந்த சிலையை வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதியே இந்த சேலம் சிலையையும் வடிவமைத்துள்ளார். ஒரு கையில் வேல் மறு கையில் ஆசி வழங்கும் திருக்கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார்.

 

பாலாபிஷேகம் செய்ய லிப்ட்

அதாவது திருமுகத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்தாலும் பாலாபிஷேகம் செய்ய நினைத்தாலும் முருகன் சிலைக்கு பின்புறம் லிப்ட் வசதி உள்ளது. இந்த கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள், முருகா, அரோகரா, கந்தா என முருகனின் பெயர்களை அழைத்தனர்.

 

இதையும் படியுங்கள் || பரமக்குடி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments