இராமநாதபுரம் மாவட்டத்தில் “தமிழ் நிலம் கணினி திருத்தம்” தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளான “0”பட்டா, புல எண்கள் விடுபட்ட இனங்கள், கணினியில் வகைப்பாடு தவறாக பதிவாகி உள்ள இனங்கள், விஸ்தீரணப்பிழை, புல எண்கள் தவறாக மாறியுள்ள இனங்கள், பெயர் திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் போன்ற திருத்தங்களுக்கு தீர்வு காணும் வகையில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் 04.07.2023 முதல் 08.07.2023 வரை அனைத்து உள்வட்ட தலைமை இடங்களிலும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் நடத்திட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்களை ஒருங்கிணைப்பாளர்களாகவும், வருவாய் கோட்டாட்சியர்/உதவி ஆட்சியரை கண்காணிப்பாளராவும் கொண்டு நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் தமிழ்நிலத்தில் காணப்படும் மேற்கண்ட கணினி திருத்தக் கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மேற்படி முகாமில் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.
“தமிழ் நிலம் கணினி திருத்தம்” பொதுமக்களின் கோரிக்கை
RELATED ARTICLES