கோவை: ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழக அணி பவுலிங்கை சமாளிக்க முடியாத சவுராஷ்டிரா அணி, முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு சுருண்டது.
ரஞ்சி கோப்பையின் 90வது சீசன் இந்தியாவில் நேற்று தொடங்கியது. கோவையில் நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதின. டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஹார்விக் (0) மற்றும் சிராக் ஆகியோருடன் சவுராஷ்டிரா மோசமான தொடக்கத்தை பெற்றது. மறுமுனையில் வேகத்துடன் மிரட்டிய முகமது முதலில் சிராக்கை (34) வெளியேற்றினார். பின்னர் பார்ஸ்வராஜ் ராணாவை (15) வெளியேற்றினார். தமிழக கேப்டன் சாய் கேஷோர் பந்தில் அனுபவ வீரர் புஜாரா (16) ஆட்டமிழந்தார்.
மீண்டும் மிரட்டிய முகமது, இந்த முறை ஷெல்டன் ஜாக்சனை (21) திருப்பி அனுப்பினார். கேப்டன் உனத்கட் (21), சாய் கிஷோர் சுழலில் சிக்கினார்கள். சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழக தரப்பில் முகமது, சாய் கிஷோர், சோனு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.பின் களமிறங்கிய தமிழக அணி முதல் நாள் முடிவில், 2 ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தது.