Tuesday, December 5, 2023
Homeராமநாதபுரம்"தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024"

“தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024”

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  காணொளிக்காட்சியின் வாயிலாக “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024” க்கான இலச்சினையினை  தமிழ்நாடு முதலமைச்சர்  வெளியிட்டார்கள்.

வளர்ச்சிக்கான முன் ஏற்பாடு

அதனையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,  மாவட்ட அளவிலான தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் மேற்கொண்டர் தமிழ்நாடு முதலமைச்சர்  தொழில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 ஜனவரியில் 07 மற்றும் 08ஆம் தேதிகளில் நடைபெறுவதற்கான இலச்சினையினை  வெளியிட்டார்கள்.

இதன் நோக்கம் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அதற்கான வழிகாட்டுதலை அரசே மேற்கொள்ளுவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வளர்ச்சிக்கான திட்ட அறிக்கை 

குறிப்பாக அதிக மானிய திட்டத்தில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே மாவட்டத்தில் அதிகளவில் தொழில் நிறுவனங்களை அமைத்து பிறருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன் தங்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட தொழில் மையம் மேலாளர் மாரிமுத்து , மாவட்ட தொழில் மையம் உதவிபொறியாளர் பிரதீப்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments