இராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் மேற்கண்ட சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள பத்திரிகை செய்தி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்நாள் வரை சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மேற்கண்ட சுற்றுலாத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் http://www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.
கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மாவட்ட சுற்றுலா அலுவலர் முழு கூடுதல் பொறுப்பு, மாவட்ட சுற்றுலா அலுவலகம், இராமநாதபுரம் மாவட்டம் (இ) இராமேஸ்வரம் இமெயில் முகவரி http://[email protected], தொலைபேசி எண்: 04573-221371, 9176995871 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.