இராமநாதபுரம் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனையகம் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரணமாக கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலையை உணர்ந்த தமிழக முதல்வர் அவர்கள் இந்த தற்காலிக விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் இராமநாதபுரம் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனையகம் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி நபருக்கு அதிகபட்சமாக 1 கிலோ வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தக்காளியினை பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.