இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதற்கட்ட பரிசோதனை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கிட்டங்கியில் திறந்து இயந்திரங்கள் பரிசோதனையினை. துவக்கினர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி,
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், திருவாடனை, முதுகுளத்தூர், பரமக்குடி (தனி) ஆகிய தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளதை அதன் தரத்தன்மை மற்றும் அதன் செயல்திறன் குறித்த முதற்கட்ட பரிசோதனை பெங்களூர் பெல் நிறுவனம் மூலம் 8 பொறியாளர்கள் கொண்ட குழுவினர் வருகை தந்து பராமரிப்பு பணியினை மேற்கொள்கிறார்கள். இப்பணியானது துவங்கி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கிட்டங்கியில் 1963 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகளும், 3263 மின்னணு வாக்குப்பதிவு கருவிகளும், 2335 வாக்குப்பதிவு காணும் கருவிகளும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனை நடைபெறும் நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் வருகை தந்து தெரிந்து கொள்ளும் வகையில் எல்இடி டிவிகள் பொருத்தப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுமதியின்றி வளாகத்திற்குள் யாரும் வராத வகையில் காவல்துறை மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பொறியாளர்கள் மூலம் முதற்கட்ட பரிசோதனை செய்து கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிசெல்வி, வட்டாட்சியர் (தேர்தல்) ரவி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.