Thursday, September 21, 2023
Homeஉடல்நலம்வில்வ பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்

வில்வ பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்

வில்வ பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்

இன்றைய தலைமுறையில் நம்மில் பலருக்கும் வில்வ இலையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்க்கு முக்கிய காரணம் நாம் இதனை அதிக அளவு பயன்படுத்துவதில்லை.

இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம். மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இதன் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்து இருந்தால் இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டேர்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குண நலன்கள் நிறைந்து உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.

இயற்கையின் மருத்துவம்:-

நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து விதமான மருந்துகளும் நிறைந்து உள்ளது.

ஆனால் இன்று நமக்கு அதனை பற்றி தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது. அத்தகைய இயற்கை மருத்துவத்தை பற்றி இன்றைய தலைமுறையினர் மிக விரிவகா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 எடுத்துரைக்கிறது.

அதில் ஒரு பகுதி தான் இந்த வில்வ இலையின் மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.

வில்வ பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்

வயிற்று வலி குணமாக:-

நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பழக்க காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும்.

இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.

முடி உதிர்தல் முற்றிலும் குறைக்க:-

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு வயதான தோற்றம் மற்றும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதில் இருந்து நாம் விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

சிகிச்சை முறை:-

வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து நாம் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் முற்றிலும் நீங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments