பாம்பனில் ரயில் பாலம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்திற்கு வந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர்
ராமேசுவரம் ரயில் நிலையம் மற்றும் தனுஷ்கோடி வரையிலான புதிய ரயில் பாதை உள்ள இடத்தை ஆய்வு செய்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ரயில் மூலம் ராமேசுவரம் வந்தார். அவர் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை, முன்பதிவு மையம், பிளாட்பாரங்கள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ரெயில் நிலைய கட்டிடத்தின் மாதிரி படங்களை பார்வையிட்டார். அதில் இடம் பெறும் பல்வேறு வசதிகள் குறித்து ரயில்வே அதிகாரிகள், பொதுமேலாளரிடம் விளக்கம் அளித்தனர்.
பாம்பனில் இருந்து மோட்டார் டிராலி மூலம் ரயில் பாலம் வழியாக அவர் தூக்குப்பாலம் மற்றும் ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். தூக்கு பாலத்தில் நின்றபடியே கடலுக்குள் ரூ.535 கோடி நிதியில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில்வே பாலத்தின் பணிகளையும் பார்வையிட்டார். மறு சீரமைப்பு பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாம்பன் வந்தார். பாம்பனில் இருந்து மோட்டார் டிராலி மூலம் ரெயில் பாலம் வழியாக அவர் தூக்குப்பாலம் மற்றும் ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். தூக்கு பாலத்தில் நின்றபடியே கடலுக்குள் ரூ.535 கோடி நிதியில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில்வே பாலத்தின் பணிகளையும் பார்வையிட்டார்.
மறுசீரமைப்பு செய்யப்படும் பாம்பன் பாலம்
ராமேசுவரம் ரெயில் நிலையம் ரூ.90 கோடி நிதியில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்னும் 2 மாதத்தில் தொடங்கப்படும். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. பல்வேறு அதிநவீன வசதிகளுடன் ரெயில் நிலையம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. விமான நிலையத்தில் உள்ள வசதிகள் போன்று ஏற்படுத்தப்படும்.
பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். அதுபோல் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள விரிவாக்கத்திற்கான இடம் கேட்கப்பட்டு உள்ளதால் இடம் ஒதுக்கப்பட்ட பின்னர், அந்தப்பகுதியில் ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே மின் வழிப் பாதை பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு என அறிவித்தர்.