ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
இராமநாதபுரம் நகரில் உள்ள சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட
தேர்வு (தொகுதி-1)
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-1)பதவிக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் பார்வையிட்டர் முதல் நிலை தேர்வுக்கு தேர்வு எழுத 6000 நபர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள்.
இத்தேர்வில் 3724 நபர்கள் தேர்வு எழுத வருகை புரிந்துள்ளார்கள். இன்று 22 மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்வு மையங்களில் 300 ஆசிரியர்கள் பணி மேற்கொள்கிறார்கள்.
கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது
ஒவ்வொரு மையத்திலும் ஒரு வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர் கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள். 3 துணை ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் முழுவதும் கண்காணிப்பு பணியில் இருந்து வருவார்கள்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். தேர்வு எழுத வருபவர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் ஒவ்வொரு மையத்திலும் தேவையான குடிநீர் வசதி, மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர்கள் எவ்வித அச்சமின்றி தேர்வு எழுதி பயன்பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர் உடன் உள்ளார்கள்.