பரமக்குடி அரசு மருத்துவமனையை திடீர் ஆய்வு மேற்கொண்டார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குறைகளை கேட்டறிந்தார்
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டதுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை குறித்து தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை வழங்கப்படுகிறது என கேட்டறிந்தார். பின்னர் மருந்து கட்டுமிடம், மருந்து மாத்திரைகள் வழங்கும் இடம், இரத்த பரிசோதனை மையம், எக்ஸ்ரே மையம், சிடி ஸ்கேன் சென்டர், இரத்த சேமிப்பு வங்கி மற்றும் மருந்துகள் இருப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டதுடன் அரசு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய உபகரணங்கள் பொதுமக்களின் சேவைக்காக வழங்கி வருகிறது.அதை நாள்தோறும் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் வழங்க வேண்டும். அதேபோல் சிடி எப்கேன் மையம் காலை முதல் மதியம் வரை தான் செயல்படுவதாகவும் மக்கள் 24 மணி நேரமும் செயல்பட கேட்டுக்கொண்டப்படி இம்மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மையம் முழு நேரமும் செயல்பட மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
கூடுதல் வசதி செய்து தரப்படும்
மருத்துவர்கள் பணி என்பது மகத்தான பணி ஆகும். இங்கே சிகிச்சைக்கு வரும் ஒவ்வொருவரும் இறைவனுக்கு நிகராக மருத்துவர்களை தான் நம்பி வருவார்கள். அத்தகைய மதிப்பு மிக்க இடத்தில் நீங்கள் வரும் நோயாளிகளிடம் அன்பு காட்டினாலே அவர்களுக்கு உள்ள நோயின் தன்மை பாதி குணமாகிவிடும். அந்த அளவிற்கு மருத்துவர்கள் ஆகிய நீங்கள் வரும் நோயாளிகளிடம் அன்பு காட்டி உரிய சிகிச்சைகளை வழங்கி பொதுமக்கள் இடையே அன்பை பெற வேண்டும்.
மேலும் இந்த மருத்துவமனைக்கு பாம்பு கடிக்கப்பட்டு அதிக நபர்கள் சிகிச்சைக்கு வருவதாக தெரிய வருகிறது அதனால் கூடுதலாக இதற்குரிய ஊசி மருந்துகள் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அதிகளவு உயர் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதை சிகிச்சைக்கு வரும் மக்களிடம் மருத்துவர்கள் எடுத்துச் சொல்லி தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும்.மேலும் 108 வாகன சேவையின் மூலம் பொதுமக்களுக்கு உடனுக்குடன் சேவைகள் செய்யப்படுகின்றன. விபத்துக்கள் ஏற்பட்டு வருபவர்களுக்கு முடிந்தளவு தேவையான சிகிச்சை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு ஆய்வாளர்கள் போன்றவர்கள் கலந்த கொண்டனர்
மேலும் காலியிடங்களாக உள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலிப்பணியிடம் நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் எந்த நேரமும் சிகிச்சை வேண்டி வரும் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சிகிச்சை வழங்குவதை தலைமை மருத்துவ அலுவலர் கண்காணித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், அவர்கள், பரமக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் நாகநாதன் அவர்கள், கண்காணிப்பு மருத்துவ அலுவலர் ஞானசௌந்தரி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.