Friday, March 29, 2024
Homeராமநாதபுரம்வெளிநாடு வேலையில் மோசடி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

வெளிநாடு வேலையில் மோசடி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

வெளிநாடு வேலையில் மோசடி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

மியான்மர், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளில் உள்ளதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் எக்சிகியூட்டிவ் (Digital Sales And Marketing Excutive) வேலைக்கு அதிக சம்பளம் என சுற்றுலா விசாவில் கூட்டிச்சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி கரன்சி மோசடியில் படித்த இளைஞர்களை ஈடுபடுத்துப்படுகின்றனர். மோசடியில் ஈடுபட மறுக்கும் இளைஞர்களை துன்புறுத்துகின்றனர்.

மியான்மர், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளில் கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி நடைபெறுவது தொடர்பாக இணையத்தின் வாயிலாக இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியத் தூதரகம், பாங்காக், இந்தியத் தூதரகம், நாம்பென் மற்றும் இந்தியத் தூதரகம், யாங்கூன் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு செய்திகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம் மற்றும் பணி விபரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு வேலைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் உண்மைத்தன்மையை முழுமையாக உறுதிசெய்து
  • கொண்டும், விபரங்கள் தெரியாவிடில் பணிசெய்யப்போகும் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகங்களை
  • தொடர்பு கொண்டு வேலைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • வெளிநாடு வாழ் தமிழர்களின் உதவிகள் மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்கள் அறிவுரைகள் பெற்றுக் கொள்ள 9600023645, 8760248625, 044-28515288 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்

என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்.செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments