சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, சிறப்புத் திட்ட திட்ட செயலாக்கத்துறையினால் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்தும், இராமநாதபுரம் மாவட்ட சமூகப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவவரின் கடிதத்தின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பாலர் சபா அமைத்திட வேண்டியும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளிலும் 20.07.2023 அன்று காலை 11.00 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 20.07.2023 அன்று காலை 11.00 மணிக்கு
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பாலர் சபா குழுக்கள் (சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழு, குழந்தைகள் உரிமைகள் குழு, கல்விக்குழு, விளையாட்டு கலை மற்றும் பண்பாட்டுக்குழு அமைத்திடவும் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதிக்க உள்ளதால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,தெரிவித்துள்ளார்.