Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்கைவினை பயிற்சி திட்டத்தின் விண்ணப்பிக்கும் முறையின் மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பிட்டார்

கைவினை பயிற்சி திட்டத்தின் விண்ணப்பிக்கும் முறையின் மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பிட்டார்

கைவினை பயிற்சி திட்டத்தின் விண்ணப்பிக்கும் முறையின் மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பிட்டார்

கைவினை பயிற்சி திட்டத்தின்கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய தொழிற்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் DGT புதுதில்லியால் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்பொழுது, கருத்தியல் பணிமனை கணித அறிவியல்  மற்றும் வேலைவாய்ப்புத் திறன்ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்களுக்கு 25-11-2022 முதல் CBT முறையில் தேர்வு நடத்த DGT புகுதில்லியால் திட்டமிடப்பட்டுள்ளது.

2014 முதல் 2017 வரை பருவமுறையில் பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு துணைத்தேர்வு எழுத (1+4) 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு அரிய வாய்ப்பும், 2018 முதல் 2021 வரை ஆண்டு முறையில் பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு துணைத்தேர்வு எழுத கூடுதலாக ஒரு வாய்ப்பும் DGT-யால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கருத்தியல் பணிமனை கணித அறிவியல் மற்றும் வேலைவாய்ப்புத்திறன் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை 10.11.2022-தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக்கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி Ponal Payment link-ல் செலுத்தி, இந்நல்வாய்ப்பினை பயன்படுத்தி துணைத்தேர்வை CBT முறையில் எழுதி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், அகில இந்திய துணைத்தொழிற்தேர்வு நவம்பர் 2022, குறித்த தகவல்களை பெற http://skilltraining.tn.gov.in மற்றும் https://ncvtmis.gov.in, ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments