இராமநாதபுரம் மாவட்டத்தில், வெவ்வேறு டிசைன்களில் 535 மொய்க்கவர்களை சேகரித்து இராமநாதபுரம் மாணவி ஐஸ்வர்ய லட்சுமி கின்னஸ் சாதனை படைத்து உள்ளதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் பாராட்டினார்.
இராமநாதபுரம் முத்துராமலிங்கசுவாமிகோவில் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன் மற்றும் சரோஜா தம்பதியரின் மகள் ஐஸ்வர்ய லட்சுமி, இராமநாதபுரம் வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 535 வெவ்வேறு டிசைன்களில் மொய்க்கவர் சேகரித்து வைத்து சாதனை முயற்சி செய்து லிம்கா உலக சாதனை மற்றும் அசிஸ்ட் உலக சாதனை நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்த சாதனையை மேற்கண்ட நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றுதல் அனுப்பி வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவி ஐஸ்வர்ய லட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரனை நேரில் சந்தித்து கின்னஸ் சாதனை சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த சித்தப்பா கஸ்தூரி ரெங்கன், சுந்தரம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், மற்றும் கார்த்திக் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.