Wednesday, March 22, 2023
Homeராமநாதபுரம்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்து

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்து

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டமாக ஆக நடுவண் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக செறிவூட்டப்பட்ட அரிசியை, பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக AAY, PHH AYY, குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக அங்கன்வாடி குழந்தைகளுக்கும் மற்றும் பி எம் போஜன் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிட அரசாணை வரப்பெற்றுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 2022 முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக AAY, PHH AYY, குடும்ப அட்டைதாரர்களுக்கும் மார்ச் 2023க்கு விநியோகம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசால் சாதாரண நலிவடைந்த மக்களின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தவும் பொது சுகாதார நலன்களை கருத்தில் கொண்டு உணவுப்பொருள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சாதாரண/ நலிவடைந்த மக்கள் இந்த அரிசியை பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பெற்று பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments