இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகிடங்கை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தானர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு வளாகத்தில் உள்ள இராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடனை, பரமக்குடி (தனி) ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டனர். மேலும் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ள 300 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகளை பாதுகாப்புடன் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் (தேர்தல்) ரவி, இராமநாதபுரம் வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.