அதிகாலை 3 முதல் 5 மணி வரை நுரையீரல் இயங்கும் நேரம். நுரையீரல் இயங்கும் நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் வேலை பார்க்கும் நேரம். காலை கடன்களை இந்த நேரத்தில் முடிக்க வேண்டும். இதனால் மலம் கழிப்பதில் சிக்கல் இருக்கவே இருக்காது.
காலை 7 முதல் 9 வரை வயிறு உணவை எதிர்நோக்கி காத்திருக்கும் நேரம். இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு வரவே வராது.
காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். நாம் சரியான நேரத்தில் சாப்பிட்ட உணவை செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் தண்ணீரோ உணவோ சாப்பிடக்கூடாது.ண
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இந்த நேரத்தில்தான் இதய நோயாளிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். நீண்ட நேரம் பேசினாலும் கோபப்படுதல் படபடத்தல் கூடாது.
பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். இந்த நேரத்தில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். உடம்பில் உள்ள கழிவு நீரை உடம்பில் இருந்து வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். இந்த நேரத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை வழிபட வேண்டிய நேரம்.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். கால நேரத்திற்கு ஏற்ற உணவை சாப்பிட வேண்டும்.
இரவு 9 முதல் 11 வரை உடம்பில் உள்ள மூன்று பாதைகள் ஒரே நேரத்தில் இணைந்து இயங்கும் நேரம்.
இரவு 11 முதல் 1 வரை எதைப்பற்றியும் துளிக்கூட கவலைப்படாமல் நிம்மதியாக உறங்கும் நேரம்.
இரவு 1 முதல் 3 வரை கல்லீரல் நேரம். கல்லீரல் மூலம் உடம்பில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் ஆழ்ந்து உறங்க வேண்டும்.