நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’ இசை வெளியீட்டு
தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான’கர்ணன்’ படத்தில் சாதி அகந்தை மிகுந்த காவல் அதிகாரியாக, வில்லன் ரோலில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் ஒளிப்பதிவாளர், நடிகர் நட்டி நடராஜ் அவர் மீண்டும் ஒரு கெட்ட காவல் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘குருமூர்த்தி’. ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில், கே.பி.தனசேகரன் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக பூனம் பட்ட பஜ்வா நடித்துள்ளார். இவர்களுடன் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடராஜ் “இது ஒரே நாளில் நடக்கும் கதை. அதற்குள் இவ்வளவு சம்பவங்களா என்று ரசிகர்கள் வியப்பார்கள்! தவறான வழியில் வரும் பணமும் அதன் பயணமும்தான் இந்தப் படத்தின் திரைக்கதையை தெறிக்கவிட்டிருக்கிறது” என்றார்.