கீழவலசை கிராமத்திற்கு முதல் முறையாக வந்த அரசுப் பேருந்து
கமுதி அருகே முதல் முறையாக கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்தை மாணவர்கள், கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.
பேருந்து இல்லாமல் சிரமப்படும் மக்கள்
கமுதி அருகே கீழவலசை என்ற கிராமத்தில் நூறு மேற்பட்ட மக்கள் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என பலர் வசித்து வருகின்றன. இக்கிராமத்திலிருந்து உள்ளப்பகுதியான பேரையூர், செங்கப்படை, கமுதி உள்ளிட்ட பகுதிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். என்று மக்கள் கூறுகின்றனர்.
மக்களின் கோரிக்கைகள்
இதனால் கிராமத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இக்கிராமத்துக்குப் பேருந்து இயக்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையடுத்து முதல் முறையாக நேற்று இக்கிராமத்துக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
மகிழ்ச்சியில் உள்ள மக்கள்
பேருந்து சேவை தொடங்கப்பட்டது எனில் தினமும் காலை, மாலை இரண்டு வேளை அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்தை பேரையூர் ஊராட்சித் தலைவர் ரூபிகேசவன் தலைமையில் பள்ளி, மாணவ மாணவிகள்மலர் தூவியும், கிராம மக்கள் பேருந்துக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் ஓட்டுநர், நடத்துநரை கவுரவப்படுத்தினர்.