பரமக்குடியில் தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற சிறுமிக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழகத்திற்கு வெண்கலம் வென்று சிறப்பித்த 10 வயது சிறுமிக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த குருநாதன் – கவிதா தம்பதியின் 10 வயது மகள் அனுஸ்ரீ. கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் சார்பாக 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தமிழகம் சார்பில் கலந்து கொண்டு 10 வயது பிரிவில் வெண்கல பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல் 10 வயது சிறுவன் வசந்த் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சில்வர் பதக்கம் வென்றுள்ளார்.
பொதுமக்களின் பிரம்மாண்ட வரவேற்பு
பதக்கங்கள் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய இருவருக்கும் ஸ்பார்க் கராத்தே அமைப்பு சார்பாக பூமாலை, சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய, மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் வெண்கல, சில்வர் பதக்கங்கள் வென்ற வென்றவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பொதுமக்கள் சார்பாக பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.