லாரியிலிருந்து ஆசிட் கசிந்ததால் ஏற்பட்ட விபத்து
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாடக்கொட்டான் அருகே நேற்று இரவு ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு மினி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
மாட்டின் ஏற்பட்ட விபத்து
இந்த லாரி நாராயணா சாலையின் நடுவே குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதியதில் டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதில் டேங்கர் லாரியில் இருந்த ஹைட்ரோ குளோரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டு சாலையில் கொட்டியது. இந்த ஹைட்ரோகுளோரிக் ஆசிட் கொட்டியதால் சாலை பகுதி முழுவதும் கடும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி தகவல் தெரிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அந்த வழியாக எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எதுவும் கொண்டு செல்லாத வகையிலும் வாகனங்கள் கவனமாக கடந்து செல்லவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஹைட்ரோகுளோரிக் ஆசிட் கசிவை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
போலீஸ் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார அங்கு சென்று விசாரணை நடத்தினர் இந்த லாரி கவிழ்ந்ததில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரத்தில் இரவு நேரத்தில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் கொட்டி சாலையில் புகை மண்டலமாக காட்சி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.