Tuesday, June 6, 2023
Homeசெய்திகள்குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல்துறை‌ அதிகாரிகளை பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு 

குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல்துறை‌ அதிகாரிகளை பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு 

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜனதா ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டார்.

தனிப்படை அமைப்பு

இந்த நேரம் பார்த்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து சென்று விட்டனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அனைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.

தீவிர விசாரணை

இந்த விசாரணையில் முதல் கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சேர்ந்த சீனி முகம்மது என்பவரின் மகன் அப்துல் ஹக்கீம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் மேலும் இப்ராஹிம் மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பரிசுத்தொகை, சான்றிதழ்

ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல், குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சித்திரவேல் உள்பட 10 போலீசாருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ.1. லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கினார். அருகில் தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments