தமிழ் திரையுலகில், தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். பட நிறுவனம் அடுத்து “ஹர்காரா” என்ற படத்தை தயாரித்துள்ளது. நவீன தொழில் நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத மலைக்கிராமத்திற்குச் நடந்தே சென்று தபால்களை பட்டுவாடா செய்யும் ஒரு தபால் காரரின் கதை இது.. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.
இப்படத்தை கதாநாயகனாக நடித்த ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கி அவரே நடித்தும் இருக்கிறார். மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். நாயகியாக கௌதமி நடிக்க மற்றும் பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படம் வருகிற 25 ஆம் தேதி வெளிவருவதாக படகுழு அறிவித்துள்ளது