இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 என்னும் தொழில்நுட்ப மையங்கள் தலா ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் 3 தொழில் பயிற்சி மையங்களிலும் ரூ.103.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில் பயிற்சியினை 312 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுவருவார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் தங்கள் விருப்பத்திற்குரிய தொழில் கல்விகளை தேர்வு செய்து பயன்பெற இத்திட்டம் பயனுள்ளதாக இருக்குமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், இராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில்நுட்ப மையத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி , இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , மதுரை மண்டல பயிற்சி இணை இயக்குநர் மகேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழுத்துணைத்தலைவர் வேலுச்சாமி , இராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் கார்மேகம் , பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் குருதிவேல்மாறன் , செல்வராஜ் , பரமக்குடி அரசினர் தொழிற்சாலை நிலையம் முதல்வர் குமரவேல் , நிலைய மேலாண்மை குழுத்தலைவர் குருநாதன் , இராமநாதபுரம் நகர் மன்றத் துணைத்தலைவர் பிரவீன்தங்கம் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன் , வேந்தோணி ஊராட்சி மன்றத்தலைவர் குழந்தை ராணி துரைராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.