Tuesday, December 5, 2023
Homeராமநாதபுரம்வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி

  • நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. சமீபத்திய நிலவரப்படி,
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் 59 சதவீகிதத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்
  • வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விரவங்களை பெற்று “கருடா” செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.
  • இதனிடையே, தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, கடந்த நவ.9-ம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 ஜனவரி.1 ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்
  • இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.
  • தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது Voters helpline கைபேசி செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
  • இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் 08.12.2022 வரை மேற்கொள்ளலாம்.
  • வேலைக்கு செல்வோரின் வசதிக்காக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தியதன்படி கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடத்தப்பட்டன.
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1371 வாக்குச் சாவடிகளிலும் இம்மாதம் 26, 27ஆகியநாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

எனவே, இச்சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,  தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments