Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்சங்கடந்தீர்க்கும் சனிபகவான் 

சங்கடந்தீர்க்கும் சனிபகவான் 

“சங்கடந்தீர்க்கும் சனிபகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றிச் சாகா நெறியில்” 

இச்சகம் வாழ இன்னருள் தாதா மாமன்னர்களையும், மகாபுருஷர்களையும் கூட விட்டுவைக்காத சக்தி வாய்ந்தவர் சனிபகவான். இவர் அவதார புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரையும் தனது ஏழரை வருட அதிகாரத்தில் படாதபாடு படுத்தி வைத்தவராவார்.

அனைத்துக் கிரகங்களுக்கும் அனேக வித சக்திகளை அளித்தருளும் சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான். காசியம்பதியில் சிவபெருமானைப் பூஜித்து அதன் பலனாக நவக்கிரகங்களில் ஒருவாரகத் திகழும் பேறு பெற்றவர் அவர். நன்மைகளானாலும், தீமைகளானாலும் உறுதியுடன் செய்பவர் என்பதால் அனைவருக்கும் அவரிடத்தில் அச்சம் அதிகம்.

எவரது ஜாதகத்தில் சனி பலம் மற்றும், சுமுகமான ஆதிபத்தியத்துடன் விளங்குகின்றாரோ, அந்த ஜாதகர்கள் நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஜீவன பாக்கியத்தையும் பெற்று மகிழ்வார்கள். ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டக சனி, அஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநாள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு வருதல் அளவற்ற நன்மை தரும்.

காகத்திற்கு தினமும் உணவளித்தலும், ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும். செய்தொழிலில் கடுமையாக உழைத்து, மிகப்பெரிய பதவிக்கு வரக்கூடிய ஆற்றலை சனி ஒருவராலேயே அளிக்க முடியும்.

துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தினால் ஆயுள், ஆரோக்கியம், செய்தொழில் அகியவற்றில் விசேஷ நன்மைகளை செய்வார். ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் மேஷ ராசியில் நீச்சம் பெற்றோ அல்லது லக்கினத்திலிருந்து 4 அல்லது 7 அல்லது 8 ம் இடங்களில் இருப்பின், அவர்கள் கண்டிப்பாகத் தினமும் சனிபகவானையும், பித்ருக்களையும் இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் அவசியம்.

வேறு விதங்களில் சனிபகவான் அனுகூலமில்லாமல் இருந்தாலும் பரிகாரம் மிகவும் அவசியம். சனிபகவானால் ஏற்படக்கூடிய ஏழு வகை தோஷங்களுக்கு மட்டும் பரிகாரம் கிடையாது. இந்த ஏழு தோஷங்களுக்கு தொழில், ஆயுள் அல்லது ஆரோக்கியம் அகியவற்றைக் கடுமையாக பாதிக்கும். மற்ற தோஷங்கள் அனைத்தும் பரிகாரத்திற்கு உட்பட்டவையே.

சனிபகவான் திருவுள்ளம் மகிழ்ந்த பரிகாரத் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது, பிரசித்தி பெற்றது திருநாள்ளாறு ஆகும். வேத காலத்திலிருந்தே இந்த தர்ப்பாரண்யேஸ்வரர் சனிபகவானுக்கும் அருள் புரிந்த பேரருளாளர் ஆவார். இன்றும் சனி, தர்ப்பாரண்யேஸ்வரரைப் பூஜித்து வருவதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.

நைடத நாட்டின் மாமன்னான நளன் சனிபகவானையும், ஈஸ்வரனையும் பூஜித்துத் துன்பங்கள் விலகி, தன் மனைவி தமயந்தியுடன் இழந்த நாட்டையும், ஐஸ்வரியங்களையும் திரும்பப் பெற்று மகிழ்ந்த திருத்தலம் இது.

  1. திருநள்ளாறு சென்று, தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பிகை, சனி பகவான் மூலவரையும் தீபமேற்றி தரிசித்து விட்டு வரவும்.
  2. (நளதீர்த்தத்தில் நீராடிய பின்பு தரிசித்தல் முறை)பித்ரூ பூஜை, சனி பகவானுக்கு மிகவும் பிடித்த பூஜை ஆகும் என்று நாரத மகரிஷி கூறுவதாக புராண நூல்கள் கூறுகின்றன.
  3. பித்ருக்களுக்காக தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பதும் இதனை உறுதி செய்கிறது.
  4. காகம் சனியின் வாகனம் ஆகும்.சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து, மாலையில் சனிபகவானுக்காகத் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வருவது.
  5. சனிக்கிழமைகளில் உடல் ஊனமற்றவர்கள், எளியவர்கள் ஆகியோருக்கு வஸ்திரம் அளித்தும், உணவு கொடுப்பது.
  6. எள் கலந்த சாதம் ஏழைகளுக்கு அளிப்பது.வீட்டில் சனிக்கிழமைகளில், மாலையில் தீபம் ஏற்றி வைப்பது.
  7. தினமும் சனி துதியையும், சனி காயத்ரியையும் கூறி வருதல் (108 தடவைகள் கூறுவது உத்தமம்) இவற்றில் எது செய்தாலும், சனிபகவானுக்குப் பிரியமானதே.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments