Sunday, May 28, 2023
Homeசினிமாநடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது...

நடிகர் ராம் பொதினேனி நடிக்கும், “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொதினேனி நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம், ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

“சண்டக்கோழி-2” திரைப்படத்துக்குப் பிறகு, இயக்குநர் லிங்குசாமி “தி வாரியர்” என்ற படத்தை இயக்குகிறார்.
தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நாயகனாகவும், நடிகர் ஆதி பினிசெட்டி வில்லனாகவும், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

அக்‌ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தென்னிந்திய சினிமாவின் மறக்கமுடியாத போலீஸ் கதைகளில் ஒன்றாக இப்படம் இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில், ஸ்ரீனிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக, துப்பாக்கி ஏந்தியபடி காட்சியளித்த போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியானது.

இந்த நிலையில், வரும் ஜூலை 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “தி வாரியர்” திரைப்படம் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் வரக்கூடிய படம் என்பதால் ஆக்‌ஷன் கலந்த செண்டிமெண்டுகளையும் எதிர்பார்க்கலாம்.

ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார். தற்போது ‘தி வாரியர்’ படத்தின் முக்கியமான பகுதிகள் பரபரப்பாக தயாராகி வருகின்றன.

 

இதையும் படியுங்கள் || இனி புரோட்டீன் பவுடர்க்கு பதில் இந்த இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments