Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்அற்புதம் நிறைந்த ஆவணி மாதம் 

அற்புதம் நிறைந்த ஆவணி மாதம் 

  • ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன.
  • தமிழ் வ‌ருடத்தில் ஐந்தாவதாக வரும் மாதமானது தமிழ் சந்திர மாதத்தில் ஆவணி என்று அழைக்கப்படுகிறது.
  • ஆவணியானது தமிழ் சூரிய மாதத்தில் சிம்ம மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இதனால் ஆவணியானது மாதங்களின் அரசன் என்ற சிறப்பினைப் பெறுகிறது.
  • கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது.
  • ஆவணியில் விநாயக சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மற்றும் ஓணம் கொண்டாடப்படுகின்றன.
  • ஆவணி மூலம், ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம், ஆவணி ஞாயிறு புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற வழிபாடுகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
  • இளையான்குடி மாறநாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் ஆகியோர்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
  • ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஆவணி மாத விழாக்களைக் கொண்டாடி வாழ்வின் மேன்மையை அடைவோம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments