இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில் நடைபெற்றது
மீன் பிடிப்பு பகுதியை பார்வையிட்டார்
அதனைத் தொடர்ந்து இராமேஸ்வரத்தில் உள்ள முக்கியமான மீன்பிடி பகுதியாக இருந்து வரும் மீன் இறங்கு தளத்தை பார்வையிட்டு அங்கு ரூ.2276.93 இலட்சம் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் புனரமைக்கும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மீன்பிடி இறங்கு தளத்தில் 772 விசைப்படகுகளும், 1100 நாட்டுப்படகுகளும் பயன்பெற்று வரும் நிலையில் தற்பொழுது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிதியிலிருந்து தற்போது மீன் இறங்குதளம் நீட்டிப்பு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மூலம் கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திட இக்குழு அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.
இராமேஸ்வரம் ஜெட்டி காவல் நிலையம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டு இப்பணியிணை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் 80% த்திற்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் ரூ.95 இலட்சத்திலயே முடித்திடும் வகையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் தெரிவித்ததை அடுத்து அவர்களை இக்குழு பாராட்டுவதுடன், மேலும் பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடித்திட குழு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.
பிரதான நினைவுச் சின்னத்தை பாதுகாத்திட வேண்டும்
பின்னர் அரிச்சல்முனை சுற்றுலா தளம் பகுதிக்கு சென்று பார்வையிட்டு சுற்றுலா வரும் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் வசதி, போதிய மின்விளக்கு வசதி போன்றவற்றை அமைத்து கண்காணித்திட நகராட்சி துறைக்கும், சுற்றுலாத்துறைக்கும் இக்குழு அறிவுறுத்துவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தனுஷ்கோடியில் இருந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு புயலால் பாதிப்படைந்த நிலையில் இருந்து வரும் தேவாலய கட்டடத்தை பார்வையிட்டு சுற்றுலாத்துறையின் மூலம் பிரதான நினைவுச் சின்னத்தை பாதுகாத்திடும் வகையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்து, தற்பொழுது ரூ.1 கோடி ஒதுக்கீடு முதல் கட்டமாக வழங்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.