Wednesday, October 4, 2023
Homeஆன்மிகம்திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு || Thiruchendur Murugan Temple

திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு || Thiruchendur Murugan Temple

திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி.

பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை. ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காசநோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.

இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறாது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு

பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குணசக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை.

அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது. பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர்.

 

இதையும் படியுங்கள் || அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments