- மகான் ஸ்ரீராகவேந்திரர் விரதத்துக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ராகவேந்திர மகானுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் இருந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
- ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து விரதம் கடைபிடித்தால் நம் மனக்குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
- விஷ்ணு பக்தரான பிரகலாதரின் அவதாரமாக ராகவேந்திரர் கருதப்படுகிறார்.
- மன அமைதி கிடைக்க, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரருக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
- பக்தர்கள் கேட்டதை மட்டுமின்றி கேட்காததையும் அருள் புரிபவர் தான் ராகவேந்திர மகான்.
விரத முறை
- விரதம் தொடங்கும் வியாழக்கிழமை அன்று காலையில் குளித்து விட்டு, தூய ஆடை அணிந்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
- பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும்.
- படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து துளசி மாலையை சாற்ற வேண்டும்.
- அதே போல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
- பிறகு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
- நைவேத்தியமாக மங்களப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை சாமி படத்தின் முன் வைக்க வேண்டும்.
- பின்னர் பூஜை செய்து ராகவேந்திரரை மனமுருகி வழிபட்டால், அமோகமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.