Friday, March 29, 2024
Homeஉடல்நலம்தூதுவளை மருத்துவ பயன்கள்|| Thuthuvalai maruthuva payangal

தூதுவளை மருத்துவ பயன்கள்|| Thuthuvalai maruthuva payangal

தூதுவளை மருத்துவ பயன்கள்

தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.

தூதுவளை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது “தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நினைச்சு மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா” என்ற பாடல்தான்,Thoothuvalai benefits tamil.

தூதுவளை செடியில் சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும் இதன் இலைகளில் மட்டுமல்லாமல் தண்டு,பூ,காய், வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் ஏராளம்.

ஆஸ்துமா உள்ளவர்கள் தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் தூதுவளையை தொட்டியில் கூட சுலபமாக வளர்க்கலாம்.

ஆஸ்துமா குணமடையும்

ஆஸ்துமா, நாள்பட்ட சளி போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு மண்டலம் அதாவது (48 நாட்கள்) தூதுவளை சாறு பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா,நாள்பட்ட சளி குணமாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் அடிக்கடி சளி,இருமல், காய்ச்சலால் அவதிப்படுவார்கள் அத்தகைய குழந்தைகளுக்கு தூதுவளை கஷாயம் வாரத்தில் இரு முறை கொடுக்க வேண்டும்.

தூதுவளை மருத்துவ பயன்கள்!

எலும்புகளுக்கு உறுதி அளிக்கும்

பொதுவாக 30 வயதிற்கு மேல் உடலில் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்புகளில் தேய்மானம்,பல் சொத்தை, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அதிலும் குறிப்பாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு கால்சியம் குறைபாடு அதிகமாக ஏற்படுகின்றன.

இதுபோன்ற பிரச்சினைகளால் அவதிபடுபவர்கள் தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தூதுவளையில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கும் மற்றும் பற்களுக்கும் உறுதி அளிக்கும்.

தாம்பத்திய உறவு மேம்படும்

தாம்பத்திய உறவு மேம்பட தூதுவளை இலையை நெய்யில் வதக்கி பூண்டு,இஞ்சி, வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் ,புளி சேர்த்தரைத்து துவையல் செய்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் தூதுவளை உடலுக்கு வலு சேர்ப்பதுடன் ஆண்மை அதிகரிக்கச் செய்யும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

வயதாகும்போது சிலருக்கு ஞாபக மறதி அதிகமாக இருப்பது சகஜமான ஒன்றுதான்
அவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க தூதுவளை துவையல் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளையில் உள்ள நரம்புகள் வலுவடையும் இதனால் மூளையில் இருக்கும் செல்கள் சீராக இயங்கி நினைவாற்றல் பெருக உதவி செய்யும்.

புற்றுநோய் குணமாக

தூதுவளையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு.

கர்ப்பப்பை, தொண்டை, வாய் புற்றுநோய் உள்ளவர்களுக்கு தூதுவரை அருமருந்தாக விளங்குவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மது, புகைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களால் ஏற்பட்ட புற்றுநோய்கள் ஆரம்பத்தில் கண்டறிந்தால் தூதுவளை இலையைப் பயன்படுத்தி ஒரு சிலமாதங்களில் குணமடைய செய்யலாம்.

எனவே புற்றுநோய் ஏற்படாமல் இருக்க தூதுவளையை குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

 

இதையும் படியுங்கள் || உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments