Thursday, March 28, 2024
Homeதொழில் பழகுவோம்டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் (Tissue Paper)

டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் (Tissue Paper)

டிஷ்யூ பேப்பர் தயார் செய்வதற்கு ‘ஜம்போ ரோல் பேப்பர்’ என்ற மூலப்பொருள் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம். ‘ஜம்போ ரோல் பேப்பர்’ தரத்திற்கு ஏற்றது போல் ஒரு கிலோ 50 முதல் 70 வரை விற்கப்படுகிறது. டன் கணக்கில் வாங்கி ஸ்டாக் வைத்து கொள்ளலாம்.

டிஷ்யூ பேப்பர் வகைகள்:

சமையல் அறை மற்றும் கேட்டரிங் சர்வீஸுக்கு பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர், பேசியல் செய்வதற்கு பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர், ஹேண்ட் கர்ச்சீப்பாக பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர், டாய்லெட் டிஷ்யூ பேப்பர் என நான்கு வகையான டிஷ்யூ பேப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி முறை:

பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்தினாலே பிரிண்டிங், கட்டிங், ஃபோல்டிங் ஆகி வெளி வந்து விடும். டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் மிஷின் தற்போது தமிழ்நாட்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மானியம்:

மாநில அரசின் ‘நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம் என ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகைக்கு மானியம் பெற வாய்ப்பு உண்டு. இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனமாக ஒரு மாதத்துக்கு 2.50 லட்சம் தேவைப்படும். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.

வாய்ப்பு:

சின்ன ஹோட்டல் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரைக்கும் டிஷ்யூ பேப்பர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே மார்க்கெட்டிங் செய்வதற்கு நாம் அதிகம் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. எனவே சிறிய மளிகை கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் நேரடியாக சென்று தாங்கள் தயார் செய்த டிஷ்யூ பேப்பரை விற்பனை செய்யலாம்.

டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்

விற்பனை வரவு:

ஒரு கிலோவிற்கு சுமார் 7 முதல் 8 பாக்கெட் வரை தயாரிக்கலாம். ஒரு பாக்கெட் ரூ.12 முதல் 15 வரை விற்பனை செய்யலாம். தினசரி 140 கிலோ உற்பத்தி செய்தால், ஒருநாளில் 1050 பாக்கெட்டுகள் கிடைக்கும். ஒரு நாள் விற்பனை வரவு ரூ.12,600. இதனடிப்படையில் மாதத்திற்கு 25 வேலை நாட்கள் எனக் கணக்கிட்டால் விற்பனை வரவு 3,15,000 ரூபாய்.

திட்ட அறிக்கை:

இடம் வாடகை: 200 ச.அடி
இயந்திரம் : ஸ்லிட்டர் ரிவைண்டர், டிஷ்யூ பேப்பர் எம்போஸிங் மெஷின் : ரூ.6 லட்சம்
நமது பங்கு: 5% = ரூ.30,000
மானியம்: 25% = ரூ.1,50,000
வங்கி கடன்: 70% = ரூ.4,20,000.

சம்பளம்:

இயந்திர ஆபரேட்டர்: 1 x 8,000 = ரூ.8,000
பேக்கிங் நபர்: 1 x 5,000 = ரூ.5,000
மார்க்கெட்டிங் நபர்: 1 x 6,000 = ரூ.6,000
இதர வேலையாள்: 1 x 5,000 = ரூ.5,000
மொத்தம் = ரூ.24,000.

ஒரு மாத செலவு:

மூலப்பொருள் = 1,99,500
பேக்கிங் செலவு = 39,900
தொழிலாளர் சம்பளம் = 24,000
இங்க் செலவு = 457
கடன் வட்டி (12.5%) = 4,375
கடன் தவணை (60 மாதம்) = 7,000
இயந்திர பராமரிப்பு = 4,000
நடைமுறை மூலதன வட்டி = 2,078

லாபம்:

மொத்த வரவு = 3,15,00
மொத்த செலவு = 2,81,310
நிகர லாபம் = 33,690.

R.O.C.
Trade License.
Uam.
No Objection Certificate.
Sales tax.
Factory license.
I.e code registration.

வணிக பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்கள்:

வருடம் தோறும் பயன்படுத்த கூடிய பொருளாக டிஷ்யூ பேப்பர் உள்ளதால் விற்பனை நடந்து கொண்டே இருக்கும். எனவே இந்தத் தொழில் 12 மாதமும் தொடர்ந்து லாபம் தரக்கூடிய தொழிலாக இருந்து வருகிறது.

 

இதையும் படியுங்கள் || தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments