மதுரை: ‘டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் பெரும்பாலான தேர்வுகளில், இறுதி விடைத்தாள் வெளியிடப்படுவதில்லை’ என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற்றது. 90 காலியிடங்களுக்கு மொத்தம் 2.38 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில், ‘டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. விடைக்குறிப்பு வெளியிட வேண்டும், தவறான மொழிபெயர்ப்புடன் 6 கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படுவதில்லை. அதேபோல், நீதித்துறை தேர்வுகளுக்கும் வெளியிடப்படுவதில்லை. வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் தமிழக அரசு விளக்கம் பெற வேண்டும். புகாரளிக்கவும்,” என உத்தரவிட்டனர்.