Tuesday, June 6, 2023
Homeசெய்திகள்பரமக்குடி நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்க கோரிக்கை

பரமக்குடி நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்க கோரிக்கை

பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினந்தோறும் பரமக்குடி நகராட்சிக்கு 300 க்கும் மேற்பட்டோர் குறிப்பாக சுகாதாரம், தெருவிளக்கு, வாறுகால் வசதி, சாலை வசதி, குடிநீர், புதிதாக வரிபோடுதல், பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட பல்வேறு பணிகளுக்காக பொது மக்கள் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மற்ற நகராட்சிகளை விட கோடிக்கணக்கில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய நகராட்சியாக பரமக்குடி நகராட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நகராட்சி பொறியாளராக அய்யனார் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பரமக்குடி நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் இல்லாத காரணத்தால் பொறுப்பு ஆணையாளராக நகராட்சி பொறியாளர் அய்யனார் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் ஆணையாளர் இல்லாததால் ஆணையாளர் ரூம் பூட்டியே கிடக்கிறது.
நகராட்சி பொறியாளர் அய்யனார் தனது பொறியாளர் ரூமில் இருந்து கொண்டு இரண்டு பணிகளையும் பார்த்து வருகிறார். நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையாளர் ரூம் எப்பொழுது போனாலும் பூட்டி கிடப்பதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். குறைகளைச் கூற மக்கள் நகராட்சி அலுவலகம் சென்றால் ஆணையாளர் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.
பரமக்குடி நகராட்சி வளாகத்தில் பூட்டிக் கிடக்கும் ஆணையாளர் அலுவலகம்.

எனவே நகராட்சி நிர்வாக ஆணையர் தலையிட்டு பரமக்குடி நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்க ஆணையிட வேண்டும்.

மக்கள் கோரிக்கை:

1. பரமக்குடி நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்க வேண்டும்.
2. பரமக்குடி நகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நபர்களை வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்ய வேண்டும்.
3. பரமக்குடி நகராட்சியால் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் சாலை, வாறுகால் அமைக்கக் கூடாது.
4. பரமக்குடி சர்வீஸ் சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்துத் தரவேண்டும்.
5. நகராட்சி எல்லைக்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் வாறுகால் அமைத்து சாலை போட வேண்டும்.
6. பரமக்குடி நகராட்சி வளாகத்திற்குள் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது.
7. வைகை ஆறு, கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
8. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும்.
9. கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
10. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுகள் தோறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
11. தினந்தோறும் வாறுகால்களை சுத்தம் செய்ய வேண்டும்.
12. ‘நுண் உர செயலாக்க மையம்’ செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13. பரமக்குடி பகுதியில் மின் மயானம் புதிதாக அமைத்து தர வேண்டும்.
14. வைகை ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஆழ்துளை மற்றும் நீர் உறிஞ்சும் கிணறுகளை சீரமைக்க வேண்டும்.
15. பரமக்குடி நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
16. சின்ன கடை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டித்தர வேண்டும்.
17. உழவர் சந்தை பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்.
18. நகராட்சிக்கு சொந்தமான ஏரி, குளங்களை கண்டுபிடிக்க வேண்டும்.
19. பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டுபிடித்து தரவேண்டும்.
20. பரமக்குடி நகரை பசுமை நகராட்சியாக மாற்ற வேண்டும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments