பரமக்குடியில் மணல் கடத்துவதை தடுக்க ! வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்
பரமக்குடியில் மணல் கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி, பாஜகவினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்றில் மணல் கடத்தல்
பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த சில நாட்களாக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் தற்போது குறைந்து வருகிறது. இதை பயன்படுத்தி பெருமாள் கோவில் படித்துறை வைகை ஆற்றில் மணல் திருடர்கள் திருட்டுத்தனமாக டிராக்டர்களில் மணல் அள்ளிச் சென்றுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி பெருமாள்கோவில் படித்துறையில் 20- க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தப்பட்டதாம். இதைத் தடுக்கத் தவறிய வருவாய்த்துறை,காவல் துறையை கண்டித்து பாஜக வர்த்தக அணிப் பிரிவு சார்பில்,பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை நடைபெற்றது.
பொதுமக்கள் பங்கேற்றனர்
இப்போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன்,பானுமதி,மறத்தமிழர் சேனை, நிறுவனர் புதுமலர் பிரபாகரன் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் வட்டாட்சியர் பார்த்தசாரதியிடம் மணல் கடத்தலைத்தடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.