Tuesday, October 3, 2023
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆனி 13

நாள் – சம நோக்கு நாள்

பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ தசமி – Jun 28 03:05 AM – Jun 29 03:19 AM

சுக்ல பக்ஷ ஏகாதசி – Jun 29 03:19 AM – Jun 30 02:42 AM

நட்சத்திரம்

சித்திரை – Jun 27 02:43 PM – Jun 28 04:00 PM

ஸ்வாதி – Jun 28 04:01 PM – Jun 29 04:30 PM

கரணம்

சைதுளை – Jun 28 03:05 AM – Jun 28 03:18 PM

கரசை – Jun 28 03:18 PM – Jun 29 03:19 AM

வனசை – Jun 29 03:19 AM – Jun 29 03:07 PM

யோகம்

சிவம் – Jun 28 06:08 AM – Jun 29 05:15 AM

ஸித்தம் – Jun 29 05:15 AM – Jun 30 03:43 AM

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:09 AM

சூரியஸ்தமம் – 6:36 PM

சந்திரௌதயம் – Jun 28 1:52 PM

சந்திராஸ்தமனம் – Jun 29 1:59 AM

அசுபமான காலம்

இராகு – 12:23 PM – 1:56 PM

எமகண்டம் – 7:42 AM – 9:16 AM

குளிகை – 10:49 AM – 12:23 PM

துரமுஹுர்த்தம் – 11:58 AM – 12:47 PM

தியாஜ்யம் – 09:43 PM – 11:21 PM

சுபமான காலம்

அமிர்த காலம் – 09:16 AM – 10:57 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:33 AM – 05:21 AM

ஆனந்ததி யோகம்

காலதண்ட Upto – 04:00 PM

தர்மம்

புதன் ஹோரை

காலை

06:00 – 07:00 – புத – சுபம்

07:00 – 08:00 – சந் – சுபம்

08:00 – 09:00 – சனி – அசுபம்

09:00 – 10:00 – குரு – சுபம்

10:00 – 11:00 – செவ் – அசுபம்

11:00 – 12:00 – சூரி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சுக் – சுபம்

01:00 – 02:00 – புத – சுபம்

02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்

04:00 – 05:00 – குரு – சுபம்

05:00 – 06:00 – செவ் – அசுபம்

06:00 – 07:00 – சூரி – அசுபம்

வாரசூலை

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

 

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் எதிர்மறையான சிந்தனைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் மத்தியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழுதான வாகனங்களை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் ஈடேறும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : உதவிகள் சாதகமாகும்.

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம் வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உடனிருப்பவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அளவுடன் இருக்கவும். வர்த்தக பணிகளில் வரவுகள் மேம்படும். மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : வரவுகள் மேம்படும்.

மிதுனம் கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். பிரிந்த உறவினர்கள் திரும்பி வருவார்கள். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

திருவாதிரை : ஈர்ப்பு அதிகரிக்கும்.

புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.

கடகம் பயணங்களின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : மரியாதை அதிகரிக்கும்.

ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.

சிம்மம் குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மகம் : மாற்றமான நாள்.

பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்திரம் : தைரியம் அதிகரிக்கும்

கன்னி  தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். மனை விற்றல், வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த தன உதவிகள் சாதகமாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : லாபம் மேம்படும்.

அஸ்தம் : மதிப்பு அதிகரிக்கும்.

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆசைகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

சித்திரை : பொறுப்புகள் மேம்படும்.

சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம் திடீர் செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சிறு சிறு விஷயங்களுக்கும் பொறுமையுடன் முடிவெடுக்கவும். நண்பர்களிடத்தில் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய புனித யாத்திரை பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நட்பு விரிவடையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : நெருக்கடியான நாள்.

அனுஷம் : வாதங்களை தவிர்க்கவும்.

கேட்டை : புரிதல் மேம்படும்.

தனுசு  வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். அரசு பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பக்தி நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.

பூராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகரம்  இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகள் சாதகமாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஆளுமை திறன் மேம்படும். சுகம் நிறைந்த நாள்

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : உதவி கிடைக்கும்.

திருவோணம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

அவிட்டம் : திறமை மேம்படும்.

கும்பம் பணிபுரியும் இடத்தில் உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி கிடைக்கும். தனவரவுகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.

சதயம் : மாற்றம் பிறக்கும்.

பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம் திடீர் செய்திகளால் செலவுகள் மேம்படும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். குலதெய்வம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதளவில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சில மனவருத்தங்கள் நேரிடலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

பூரட்டாதி : செலவுகள் மேம்படும்.

உத்திரட்டாதி : குழப்பம் நீங்கும்.

ரேவதி : கவனம் வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments