Wednesday, April 17, 2024
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, சித்திரை 9 நாள் – கீழ் நோக்கு நாள்பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ துவிதியை – Apr 21 08:29 AM – Apr 22 07:49 AM                            சுக்ல பக்ஷ திருதியை – Apr 22 07:49 AM – Apr 23 07:47 AM

நட்சத்திரம்

கார்த்திகை – Apr 21 10:59 PM – Apr 22 11:24 PM

ரோஹிணி – Apr 22 11:24 PM – Apr 24 12:27 AM

கரணம்

கௌலவம் – Apr 21 08:04 PM – Apr 22 07:49 AM

சைதுளை – Apr 22 07:49 AM – Apr 22 07:43 PM

கரசை – Apr 22 07:43 PM – Apr 23 07:47 AM

யோகம்

ஆயுஷ்மான் – Apr 21 10:59 AM – Apr 22 09:25 AM

சௌபாக்யம் – Apr 22 09:25 AM – Apr 23 08:21 AM

வாரம்

சனிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM

சூரியஸ்தமம் – 6:25 PM

சந்திரௌதயம் – Apr 22 7:39 AM

சந்திராஸ்தமனம் – Apr 22 8:31 PM

அசுபமான காலம்

இராகு – 9:15 AM – 10:46 AM

எமகண்டம் – 1:50 PM – 3:21 PM

குளிகை – 6:11 AM – 7:43 AM

துரமுஹுர்த்தம் – 07:49 AM – 08:38 AM

தியாஜ்யம் – 04:06 PM – 05:46 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:53 AM – 12:42 PM

அமிர்த காலம் – 08:57 PM – 10:35 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

துவஜ Upto – 11:24 PM

ஸ்ரீவச்சம

சனி ஹோரை

காலை

06:00 – 07:00 – சனி – அசுபம்

07:00 – 08:00 – குரு – சுபம்

08:00 – 09:00 – செவ் – அசுபம்

09:00 – 10:00 – சூரி – அசுபம்

10:00 – 11:00 – சுக் – சுபம்

11:00 – 12:00 – புத – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சந் – சுபம்

01:00 – 02:00 – சனி – அசுபம்

02:00 – 03:00 – குரு – சுபம்

மாலை

03:00 – 04:00 – செவ் – அசுபம்

04:00 – 05:00 – சூரி – அசுபம்

05:00 – 06:00 – சுக் – சுபம்

06:00 – 07:00 – புதன் – சுபம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கல்வியில் புதிய வாய்ப்பும், முன்னேற்றமும் ஏற்படும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.

பரணி : கலகலப்பான நாள்.

கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

ரிஷபம் பயணங்களின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். அமைதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : சோர்வு ஏற்படும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : ஆர்வமின்மையான நாள்.

மிதுனம் வேலையில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபம் மேம்படும். எதிர்ப்புகளை அறிந்து வித்தியாசமான செயல்முறைகளில் செயல்படுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.

திருவாதிரை : லாபம் மேம்படும்.

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

கடகம் சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூசம் : முயற்சிகள் கைகூடும்.

ஆயில்யம் : செல்வாக்கு மேம்படும்.

சிம்மம் சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்கள் கைகூடும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : சுறுசுறுப்பான நாள்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : ஆதரவான நாள்.

கன்னி குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். திருத்தலம் தொடர்பான பயணங்கள் கைகூடும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

அஸ்தம் : ஏற்ற, இறக்கமான நாள்.

சித்திரை : ஆர்வம் ஏற்படும்

துலாம் உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தினால் விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவுபெறும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.

சுவாதி : நிதானத்துடன் செயல்படவும்.

விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

விருச்சிகம் எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் அதிகரிக்கும். மனதில் வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் மற்றும் உத்தியோகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

விசாகம் : மனப்பக்குவம் அதிகரிக்கும்.

அனுஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.

தனுசு நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திராடம் : விருப்பம் நிறைவேறும்.

மகரம் மனதில் கற்பனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உறவினர்களிடம் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : இன்னல்கள் குறையும்.

திருவோணம் : மேன்மை ஏற்படும்.

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம் மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் ஆதாயம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

அவிட்டம் : சிந்தனைகள் பிறக்கும்.

சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

மீனம் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்பம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

பூரட்டாதி : திருப்பம் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரேவதி : மாற்றமான நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments