Tuesday, June 6, 2023
Homeஆன்மிகம்இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, சித்திரை 25
நாள் – சம நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ திருதியை – May 07 08:15 PM – May 08 06:19 PM

கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – May 08 06:19 PM – May 09 04:08 PM

நட்சத்திரம்

கேட்டை – May 07 08:21 PM – May 08 07:10 PM

மூலம் – May 08 07:10 PM – May 09 05:45 PM

கரணம்

வனசை – May 07 08:15 PM – May 08 07:19 AM

பத்திரை – May 08 07:19 AM – May 08 06:19 PM

பவம் – May 08 06:19 PM – May 09 05:15 AM

பாலவம் – May 09 05:15 AM – May 09 04:08 PM

யோகம்

சிவம் – May 08 02:52 AM – May 09 12:09 AM

ஸித்தம் – May 09 12:09 AM – May 09 09:16 PM

வாரம்

திங்கட்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:06 AM
சூரியஸ்தமம் – 6:26 PM

சந்திரௌதயம் – May 08 9:11 PM
சந்திராஸ்தமனம் – May 09 9:06 AM

அசுபமான காலம்

இராகு – 7:38 AM – 9:11 AM

எமகண்டம் – 10:43 AM – 12:16 PM

குளிகை – 1:48 PM – 3:21 PM

துரமுஹுர்த்தம் – 12:40 PM – 01:30 PM, 03:08 PM – 03:58 PM

தியாஜ்யம் – 04:15 PM – 05:45 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:51 AM – 12:40 PM

அமிர்த காலம் – 10:48 AM – 12:19 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:30 AM – 05:18 AM

ஆனந்ததி யோகம்

பத்ம Upto – 07:10 PM
லம்பம்

திங்கள் ஹோரை

காலை

06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்

மாலை

03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் நினைத்த பணிகளை சில தடைகளுக்கு பிறகு செய்து முடிப்பீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

பரணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.

ரிஷபம் பொருளாதாரம் நிமிர்த்தமான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.

ரோகிணி : இலக்குகள் பிறக்கும்.

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.

மிதுனம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாகனம் மாற்றம் நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

திருவாதிரை : முடிவு கிடைக்கும்.

புனர்பூசம் : மாற்றமான நாள்.

கடகம் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய திட்டங்களில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் தொடர்பான எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.

பூசம் : அனுகூலமான நாள்.

ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும்.

சிம்மம் கால்நடை தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெற்றோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். வரவுகள் தாராளமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். களிப்புகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : மேன்மை உண்டாகும்.

பூரம் : விவேகத்துடன் செயல்படவும்.

உத்திரம் : செலவுகள் உண்டாகும்.

கன்னி உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : திருப்தி உண்டாகும்.

சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.

துலாம் புகுடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சாதுரியமான பேச்சுக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் மேன்மை அடைவீர்கள். ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : விவாதங்கள் நீங்கும்.

சுவாதி : மேன்மையான நாள்.

விசாகம் : அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம் காப்பீடு சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் பதற்றமின்றி செயல்படவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். லாபகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : முதலீடுகள் அதிகரிக்கும்.

தனுசு பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். எளிதான விஷயங்கள் கூட தாமதமாக முடியும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களின் மூலம் விரயங்கள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் : அலைச்சல்கள் ஏற்படும்.

பூராடம் : விவாதங்கள் மறையும்.

உத்திராடம் : விரயங்கள் அதிகரிக்கும்.

மகரம் உறவினர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். சுபகாரியத்தில் இருந்துவந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். பொருட்சேர்க்கை நிமிர்த்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.

திருவோணம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் : முடிவு கிடைக்கும்.

கும்பம் புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் விலகும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் தெளிவு பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செலவுகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : இன்னல்கள் விலகும்.

பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.

மீனம் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.

ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments