இன்றைய நாள்
தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆடி 13
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ ஏகாதசி – Jul 28 02:51 PM – Jul 29 01:05 PM
சுக்ல பக்ஷ துவாதசி – Jul 29 01:05 PM – Jul 30 10:34 AM
நட்சத்திரம்
கேட்டை – Jul 29 12:55 AM – Jul 29 11:34 PM
மூலம் – Jul 29 11:34 PM – Jul 30 09:32 PM
கரணம்
பத்திரை – Jul 29 02:04 AM – Jul 29 01:05 PM
பவம் – Jul 29 01:05 PM – Jul 29 11:55 PM
பாலவம் – Jul 29 11:55 PM – Jul 30 10:34 AM
யோகம்
பராம்யம் – Jul 28 11:56 AM – Jul 29 09:34 AM
மாஹேந்த்ரம் – Jul 29 09:34 AM – Jul 30 06:33 AM
வாரம்
சனிக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:15 AM
சூரியஸ்தமம் – 6:37 PM
சந்திரௌதயம் – Jul 29 3:21 PM
சந்திராஸ்தமனம் – Jul 30 3:16 AM
அசுபமான காலம்
இராகு – 9:20 AM – 10:53 AM
எமகண்டம் – 1:59 PM – 3:31 PM
குளிகை – 6:15 AM – 7:48 AM
துரமுஹுர்த்தம் – 07:54 AM – 08:43 AM
தியாஜ்யம் – 08:04 PM – 09:32 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 12:01 PM – 12:51 PM
அமிர்த காலம் – 03:16 PM – 04:47 PM
பிரம்மா முகூர்த்தம் – 04:39 AM – 05:27 AM
ஆனந்ததி யோகம்
முசலம் Upto – 11:34 PM
கதா
பண்டிகைகள் மற்றும் விரதங்கள்
ஏகாதசி விரதம்
சனி ஹோரை
காலை
06:00 – 07:00 – சனி – அசுபம்
07:00 – 08:00 – குரு – சுபம்
08:00 – 09:00 – செவ் – அசுபம்
09:00 – 10:00 – சூரி – அசுபம்
10:00 – 11:00 – சுக் – சுபம்
11:00 – 12:00 – புத – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சந் – சுபம்
01:00 – 02:00 – சனி – அசுபம்
02:00 – 03:00 – குரு – சுபம்
மாலை
03:00 – 04:00 – செவ் – அசுபம்
04:00 – 05:00 – சூரி – அசுபம்
05:00 – 06:00 – சுக் – சுபம்
06:00 – 07:00 – புதன் – சுபம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : அலைச்சல்கள் ஏற்படும்.
கிருத்திகை : போட்டிகள் உண்டாகும்.
ரிஷபம் தனவரவுகளால் புதிய ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பள்ளிப்பருவ நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். சுபகாரிய விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.
மிருகசீரிஷம் : சந்திப்பு ஏற்படும்.
மிதுனம் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தூரத்து உறவினர்களின் வருகை ஏற்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ கருத்துகள் வெளிப்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : ஆதாயம் ஏற்படும்.
புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.
கடகம் திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : காரியங்கள் நிறைவேறும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : கனவுகள் நிறைவேறும்.
சிம்மம் மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வச்சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூரம் : கவலைகள் குறையும்.
உத்திரம் : பொறுப்புகள் கிடைக்கும்.
கன்னி வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
உத்திரம் : புதுமையான நாள்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
துலாம் கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். குடும்பத்தாரின் வழியில் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : உதவிகள் தாமதமாகும்.
விசாகம் : அனுபவம் உண்டாகும்.
விருச்சிகம் தனவரவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். நிதானமான சில காரியங்கள் உங்கள் மீது நன்மதிப்பை மேம்படுத்தும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
அனுஷம் : குழப்பம் நீங்கும்.
கேட்டை : மதிப்பு மேம்படும்.
தனுசு கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வேள்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். ஓய்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : தெளிவு ஏற்படும்.
மகரம் அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : மதிப்பு மேம்படும்.
திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம் உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களால் ஆதாயம் உண்டாகும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : மதிப்பு கிடைக்கும்.
சதயம் : ஆதாயம் ஏற்படும்.
பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
மீனம் மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.
உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும்.
ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.