Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்புதிய பார்வை ராசிபலன் (13-08-2023)

புதிய பார்வை ராசிபலன் (13-08-2023)

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆடி 28
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ துவாதசி – Aug 12 06:31 AM – Aug 13 08:20 AM

கிருஷ்ண பக்ஷ திரயோதசி – Aug 13 08:20 AM – Aug 14 10:25 AM

நட்சத்திரம்

திருவாதிரை – Aug 12 06:02 AM – Aug 13 08:26 AM

புனர்பூசம் – Aug 13 08:26 AM – Aug 14 11:07 AM

கரணம்

சைதுளை – Aug 12 07:23 PM – Aug 13 08:20 AM

கரசை – Aug 13 08:20 AM – Aug 13 09:21 PM

வனசை – Aug 13 09:21 PM – Aug 14 10:25 AM

யோகம்

வஜ்ரம் – Aug 12 03:22 PM – Aug 13 03:55 PM

ஸித்தி – Aug 13 03:55 PM – Aug 14 04:40 PM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:16 AM
சூரியஸ்தமம் – 6:33 PM

சந்திரௌதயம் – Aug 13 3:31 AM
சந்திராஸ்தமனம் – Aug 13 4:31 PM

அசுபமான காலம்

இராகு – 5:01 PM – 6:33 PM

எமகண்டம் – 12:24 PM – 1:56 PM

குளிகை – 3:29 PM – 5:01 PM

துரமுஹுர்த்தம் – 04:54 PM – 05:43 PM

தியாஜ்யம் – 09:46 PM – 11:33 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 12:00 PM – 12:49 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:40 AM – 05:28 AM

ஆனந்ததி யோகம்

துர்வாஞ்சம் Upto – 08:26 AM
துவஜ

ஞாயிறு ஹோரை

காலை

06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை

03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்

வாரசூலை

சூலம் – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் ஏற்படும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். மனை விருத்திக்கான முயற்சிகள் கைகூடும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : தன்னம்பிக்கை மேம்படும்.

பரணி : நெருக்கடிகள் நீங்கும்.

கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.

ரிஷபம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.

ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வெளியூர் பயண சிந்தனைகள் மேம்படும். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். பணியில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.

திருவாதிரை : தேவைகள் நிறைவேறும்.

புனர்பூசம் : மந்தமான நாள்.

கடகம்

இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூசம் : மாற்றம் உண்டாகும்.

ஆயில்யம் : ஈடுபாடு ஏற்படும்.

சிம்மம்

வருமான வாய்ப்புகள் மேம்படும். அயல் நாட்டு பயணங்கள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். முதலாளி வகையில் ஒத்துழைப்பு மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : வாய்ப்புகள் மேம்படும்.

பூரம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

கன்னி

வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். அலுவலகப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.

அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சித்திரை : தெளிவு பிறக்கும்.

துலாம்

தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.

சுவாதி : அதிர்ஷ்டகரமான நாள்.

விசாகம் : நெருக்கடிகள் மறையும்.

விருச்சிகம்

காப்பீட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மறைமுக எதிர்ப்புகளால் விரயம் உண்டாகும். பயனற்ற வாதங்களை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் : பொறுமை வேண்டும்.

கேட்டை : வாதங்களை குறைக்கவும்.

தனுசு

பலதரப்பட்ட மக்களின் தொடர்பு ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : தொடர்புகள் ஏற்படும்.

பூராடம் : தடைகள் குறையும்.

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

மகரம்

ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

உத்திராடம் : இன்னல்கள் குறையும்.

திருவோணம் : ஆதாயம் மேம்படும்.

அவிட்டம் : சாதகமான நாள்.

கும்பம்

மனதளவில் உற்சாகமான சிந்தனைகள் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். போட்டி, பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு காரியங்களில் பொருமை வேண்டும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : உற்சாகமான நாள்.

சதயம் : நெருக்கடிகள் குறையும்.

பூரட்டாதி : தொடர்பு கிடைக்கும்.

மீனம்

மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தந்தை வழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் நற்பெயர் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

ரேவதி : அனுகூலம் ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments