இன்றைய நாள்
தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, புரட்டாசி 1
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ திருதியை – Sep 17 11:09 AM – Sep 18 12:39 PM
சுக்ல பக்ஷ சதுர்த்தி – Sep 18 12:39 PM – Sep 19 01:43 PM
நட்சத்திரம்
சித்திரை – Sep 17 10:02 AM – Sep 18 12:07 PM
ஸ்வாதி – Sep 18 12:07 PM – Sep 19 01:48 PM
கரணம்
கரசை – Sep 17 11:57 PM – Sep 18 12:39 PM
வனசை – Sep 18 12:39 PM – Sep 19 01:15 AM
பத்திரை – Sep 19 01:15 AM – Sep 19 01:43 PM
யோகம்
மாஹேந்த்ரம் – Sep 18 04:27 AM – Sep 19 04:24 AM
வைத்ருதி – Sep 19 04:24 AM – Sep 20 03:57 AM
வாரம்
திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:13 AM
சூரியஸ்தமம் – 6:15 PM
சந்திரௌதயம் – Sep 18 8:26 AM
சந்திராஸ்தமனம் – Sep 18 8:32 PM
அசுபமான காலம்
இராகு – 7:43 AM – 9:13 AM
எமகண்டம் – 10:43 AM – 12:14 PM
குளிகை – 1:44 PM – 3:14 PM
துரமுஹுர்த்தம் – 12:38 PM – 01:26 PM, 03:02 PM – 03:50 PM
தியாஜ்யம் – 06:07 PM – 07:50 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:50 AM – 12:38 PM
அமிர்த காலம் – 04:23 AM – 06:06 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM
ஆனந்ததி யோகம்
முத்தகம் Upto – 12:07 PM
சத்திரம்
பண்டிகைகள் மற்றும் விரதங்கள்
சபரிமலையில் நடை திறப்பு
சாம உபாகர்மம்
ஸ்ரீ ஸ்வர்ண கௌரி விரதம்
சோமவார விரதம்
திங்கள் ஹோரை
காலை
06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்
மாலை
03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தவறிய சில பொருட்களை பற்றிய குறிப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வர்த்தக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அஸ்வினி : தொடர்பு கிடைக்கும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : முடிவு கிடைக்கும்.
ரிஷபம்
வெளி உணவுகளைத் தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். கால்நடை பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். திடீர் செய்திகளின் மூலம் அலைச்சல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
கிருத்திகை : ஆதாயம் மேம்படும்.
ரோகிணி : பொறுமையுடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : இறுக்கம் குறையும்.
மிதுனம்
மனதளவில் உற்சாகமான சிந்தனைகள் உண்டாகும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். குழந்தைகளை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். நாவல் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
கடகம்
எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கால்நடை வளர்ப்பால் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும்.
சிம்மம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். மனை விருத்திக்கான முயற்சிகள் கைகூடி வரும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : முயற்சிகள் கைகூடும்.
கன்னி
பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பேச்சுக்கு உண்டான மதிப்பு தாமதமாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சூழ்நிலையறிந்து செயல்படவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் பிறக்கும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். ஆபரணங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்
சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நிர்வாகத் துறைகளில் பொறுமையுடன் செயல்படவும். தனித்துச் செயல்படுவதில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயண சிந்தனைகள் மேம்படும். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். உடல் அமைப்பு பற்றிய எண்ணங்கள் மேம்படும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : குழப்பங்கள் குறையும்.
சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.
விசாகம் : திருப்தியற்ற நாள்.
விருச்சிகம்
உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். வாக்குறுதிகளை அளிப்பதைத் தவிர்க்கவும். ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். கொடுக்கல், வாங்கலில் விவேகத்துடன் செயல்படவும். திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிற இன மக்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
விசாகம் : புரிதல் மேம்படும்.
அனுஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
கேட்டை : ஆதாயம் அடைவீர்கள்.
தனுசு
கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு மேம்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். சகோதரிகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் லாபம் உண்டாகும். புதுமையான சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மூலம் : இழுபறிகள் விலகும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
மகரம்
அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். ஆன்மிகத்தில் தெளிவு பிறக்கும். கற்றல் திறனில் சில புதுமையான சூழல் ஏற்படும். பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். உற்பத்தி பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். முயற்சிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : புதுமையான நாள்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
கும்பம்
மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தந்தை வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : குழப்பங்கள் விலகும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஈடுபாடு ஏற்படும்.
மீனம்
பயனற்ற வாக்குவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். இயந்திர துறைகளில் கவனம் வேண்டும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வமின்மையான நாள்.
ரேவதி : கையிருப்புகள் குறையும்.