Friday, April 12, 2024
Homeஆன்மிகம்புதிய பார்வை ராசிபலன் (23-08-2023)

புதிய பார்வை ராசிபலன் (23-08-2023)

இன்றைய நாள் 

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, ஆவணி 6
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சப்தமி – Aug 23 03:06 AM – Aug 24 03:31 AM

சுக்ல பக்ஷ அஷ்டமி – Aug 24 03:31 AM – Aug 25 03:10 AM

நட்சத்திரம்

ஸ்வாதி – Aug 22 06:31 AM – Aug 23 08:08 AM

விசாகம் – Aug 23 08:08 AM – Aug 24 09:04 AM

கரணம்

கரசை – Aug 23 03:06 AM – Aug 23 03:24 PM

வனசை – Aug 23 03:24 PM – Aug 24 03:31 AM

பத்திரை – Aug 24 03:31 AM – Aug 24 03:27 PM

யோகம்

பராம்யம் – Aug 22 10:17 PM – Aug 23 09:44 PM

மாஹேந்த்ரம் – Aug 23 09:44 PM – Aug 24 08:36 PM

வாரம்

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:16 AM
சூரியஸ்தமம் – 6:29 PM

சந்திரௌதயம் – Aug 23 11:17 AM
சந்திராஸ்தமனம் – Aug 23 11:17 PM

அசுபமான காலம்

இராகு – 12:22 PM – 1:54 PM

எமகண்டம் – 7:47 AM – 9:19 AM

குளிகை – 10:50 AM – 12:22 PM

துரமுஹுர்த்தம் – 11:58 AM – 12:46 PM

தியாஜ்யம் – 01:57 PM – 03:37 PM

சுபமான காலம்

அமிர்த காலம் – 11:55 PM – 01:35 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:39 AM – 05:27 AM

ஆனந்ததி யோகம்

தர்மம் Upto – 08:08 AM
பிரபாபதி

புதன் ஹோரை

காலை

06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11:00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்

வாரசூலை

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : மதிப்பு அதிகரிக்கும்.

பரணி : முன்னேற்றம் உண்டாகும்.

கிருத்திகை : ஈடுபாடு ஏற்படும்.

ரிஷபம்

குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.

ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : கனவுகள் பிறக்கும்.

மிதுனம்

நினைத்த சில காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பணி சார்ந்த இழுபறியான சில வேலைகள் முடியும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.

திருவாதிரை : லாபம் அதிகரிக்கும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

கடகம்

தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : முடிவு பிறக்கும்.

பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஆயில்யம் : அனுகூலம் பிறக்கும்.

சிம்மம்

மனதளவில் இருந்துவந்த வருத்தங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : வருத்தங்கள் குறையும்.

பூரம் : உதவிகள் சாதகமாகும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : கவலைகள் ஏற்படும்.

சித்திரை : மதிப்பு மேம்படும்.

துலாம்

நினைத்த சில பணிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பழைய கடன் சார்ந்த முயற்சிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். புரிதல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

சுவாதி : புரிதல் அதிகரிக்கும்.

விசாகம் : ஆர்வமின்மையான நாள்.

விருச்சிகம்

மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் சந்திப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தின் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : அனுகூலம் ஏற்படும்.

கேட்டை : கையிருப்புகள் மேம்படும்

தனுசு

சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கைகொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உறவுகளின் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் : அனுபவம் மேம்படும்.

பூராடம் : தட்டிக்கொடுத்துச் செயல்படவும்.

உத்திராடம் : தெளிவு பிறக்கும்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். தடைபட்ட சில வேலைகள் முடியும். தனம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.

திருவோணம் : போட்டிகள் குறையும்.

அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.

கும்பம்

மற்றவர்களை எதிர்பார்த்திருக்காமல் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் கனிவு வேண்டும். சிக்கலான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : கனிவு வேண்டும்.

சதயம் : ஏற்ற, இறக்கமான நாள்.

பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.

மீனம்

பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.

ரேவதி : குழப்பம் குறையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments