Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்புதிய பார்வை ராசிபலன் (24-09-2023)

புதிய பார்வை ராசிபலன் (24-09-2023)

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, புரட்டாசி 7
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ நவமி – Sep 23 12:18 PM – Sep 24 10:23 AM

சுக்ல பக்ஷ தசமி – Sep 24 10:23 AM – Sep 25 07:56 AM

நட்சத்திரம்

பூராடம் – Sep 23 02:56 PM – Sep 24 01:41 PM

உத்திராடம் – Sep 24 01:41 PM – Sep 25 11:55 AM

கரணம்

கௌலவம் – Sep 23 11:25 PM – Sep 24 10:23 AM

சைதுளை – Sep 24 10:23 AM – Sep 24 09:13 PM

கரசை – Sep 24 09:13 PM – Sep 25 07:56 AM

யோகம்

சோபனம் – Sep 23 09:30 PM – Sep 24 06:39 PM

அதிகண்டம் – Sep 24 06:39 PM – Sep 25 03:23 PM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:12 AM
சூரியஸ்தமம் – 6:11 PM

சந்திரௌதயம் – Sep 24 1:59 PM
சந்திராஸ்தமனம் – Sep 25 1:55 AM

அசுபமான காலம்

இராகு – 4:41 PM – 6:11 PM

எமகண்டம் – 12:11 PM – 1:41 PM

குளிகை – 3:11 PM – 4:41 PM

துரமுஹுர்த்தம் – 04:35 PM – 05:23 PM

தியாஜ்யம் – 09:06 PM – 10:35 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:47 AM – 12:35 PM

அமிர்த காலம் – 09:08 AM – 10:39 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:36 AM – 05:24 AM

ஆனந்ததி யோகம்

சுபம் Upto – 01:41 PM
அமுதம்

ஞாயிறு ஹோரை

காலை

06:00 – 07:00 – சூரி – அசுபம்
07:00 – 08:00 – சுக் – சுபம்
08:00 – 09:00 – புத – சுபம்
09:00 – 10:00 – சந் – சுபம்
10:00 – 11:00 – சனி – அசுபம்
11:00 – 12:00 – குரு – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – செவ் – அசுபம்
01:00 – 02:00 – சூரி – அசுபம்
02:00 – 03:00 – சுக் – சுபம்

மாலை

03:00 – 04:00 – புத – சுபம்
04:00 – 05:00 – சந் – சுபம்
05:00 – 06:00 – சனி – அசுபம்
06:00 – 07:00 – குரு – சுபம்

வாரசூலை

சூலம் – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

வாகனங்களைச் சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசுப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.

பரணி : கருத்துகளைத் தவிர்க்கவும்.

கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும். ஜி

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான விரயம் ஏற்படும். குழந்தைகளின் மேற்படிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கற்பனைத் திறன் மேம்படும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செல்வச்சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : தாமதங்கள் குறையும்.

ரோகிணி : திறன் மேம்படும்.

மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்

செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விவசாயப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தெளிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

திருவாதிரை : இன்னல்கள் குறையும்.

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். மறைமுக திறமைகள் வெளிப்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

புனர்பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

பூசம் : திறமைகள் வெளிப்படும்.

ஆயில்யம் : முடிவு கிடைக்கும்.

சிம்மம்

நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். சிக்கலான சில விஷயங்களுக்குத் தெளிவு பிறக்கும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சிந்தனைகள் மேம்படும்.

பூரம் : பிரச்சனைகள் குறையும்.

உத்திரம் : தெளிவு பிறக்கும்.

கன்னி

உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : புதுமையான நாள்.

அஸ்தம் : குழப்பம் குறையும்.

சித்திரை : விரயங்கள் உண்டாகும்.

துலாம்

விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

சித்திரை : ஏற்ற, இறக்கமான நாள்.

சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.

விருச்சிகம்

வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

அனுஷம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

கேட்டை : ஆதரவான நாள்.

தனுசு

வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார பணிகளில் வரவுகள் உண்டாகும். முகத்தில் பொலிவு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் மாற்றம் ஏற்படும். கலைகளை கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மூலம் : சிந்தித்துச் செயல்படவும்.

பூராடம் : ஆதரவான நாள்.

உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்

மகரம்

மனதளவில் புதிய இலக்குகள் பிறக்கும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும். தேர்வு பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : இலக்குகள் பிறக்கும்.

திருவோணம் : மதிப்பு அதிகரிக்கும்.

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் மேம்படும். தூர தேச பயண எண்ணங்கள் கைகூடும். அலங்கார விஷயங்களில் ஈர்ப்பு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

சதயம் : ஆர்வம் மேம்படும்.

பூரட்டாதி : நெருக்கடிகள் உண்டாகும்.

மீனம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வருமான வாய்ப்பை மேம்படுத்துவீர்கள். இழுபறியான சில விஷயங்களை முடிப்பீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : அறிமுகம் ஏற்படும்.

ரேவதி : வாய்ப்புகள் சாதகமாகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments